சிதம்பரம் அருகே உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சிதம்பரம் அருகே உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Dec 2020 11:20 AM IST (Updated: 31 Dec 2020 11:20 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே சி.தண்டீஸ்வரநல்லூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 43), இவர் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஆரோக்கியசாமி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கீழ்மை கொண்டான் கிராமத்திற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் பதறிய அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 ¾ பவுன் நகை மற்றும் வெள்ளிபொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசாா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story