வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
தமிழகத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட அரசை வலியுறுத்தியும் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடந்த 1-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பும், பேரூராட்சி அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அந்த வகையில் கடலூரில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோபிநாத், மாநில துணைத்தலைவர் சண்முகம், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர்கள் தர்மலிங்கம், பழ.தாமரைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் கடலூர் அண்ணா பாலம் அருகில் இருந்து மஞ்சக்குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில அமைப்பு துணை செயலாளர் வெங்கடேசன், இளைஞர் சங்க துணை செயலாளர் சந்திரசேகர், மாணவர் சங்க செயலாளர் விஜயவர்மன், பசுமை தாயகம் அசோக்குமார், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க தலைவர் ரமேஷ், நிர்வாகி சிலம்பு உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மனு
பின்னர் மாநில துணை பொதுச்செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் பா.ம.க.வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு, கலைந்து சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.

Related Tags :
Next Story