அரசு கல்லூரியில் மண்டல இணை இயக்குனா் ஆய்வு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 260 மாணவ, மாணவிகளை கொண்டு தொடங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 260 மாணவ, மாணவிகளை கொண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியை தஞ்சை மண்டல இணை இயக்குனர் உஷா தலைமையிலான பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு குழுவினரான பேராசிரியர்கள் திருமுருகன், அஜ்மல்கான், சார்லஸ், சுவாமிநாதன், தாமஸ் பியூலா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரியின் கட்டமைப்பு, வகுப்பறைகள், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு தக்கவாறு மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை உறுதிபடுத்தும் வகையில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கோடித்துரை, அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story