தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி உள்ளோம்; 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி இருப்பதால், 2021-ம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
ஆய்வு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 3, 4-ந் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு அவர் பிரசாரம் செய்ய உள்ள பகுதிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ கடந்த 2 நாட்களாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி நேற்று கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், அடைக்கலாபுரம், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், தாசில்தார் ஜஸ்டின், திருப்பாற்கடல் ராஜ், விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வாக்குறுதிகள்
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இது தவிர நகரும் அம்மா ரேஷன்கடைகளையும் தொடங்கி வைத்து உள்ளார். குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் நீர்மேலாண்மையில், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். அம்மா மினிகிளினிக் தொடங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். அப்போது புனித பனிமயமாதா ஆலயத்துக்கு வருகிறார். அனைவரது அன்பையும் பெற்று 2021-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். 234 தொகுதி எங்கள் லட்சியம். வெல்வது நிச்சயம். கருத்து கணிப்பில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறப்பட்டு உள்ளது’ என்றார்.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புதியம்புத்தூரில் இருந்து நாளைமறுநாள் மாலை 5 மணிக்கு முதல்- அமைச்சர் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரத்தில் மாலை 5.15 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதை தொடர்ந்து நேற்று புதியம்புத்தூர் மற்றும் ஓட்டப்பிடாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முதல்- அமைச்சர் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான மோகன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன்பெருமாள், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், ஓட்டப்பிடாரம் தாசில்தார் முத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் பெரிய மோகன், கருப்பசாமி, கண்ணன், யூனியன் ஆணையாளர்கள் ஹெலன் பொன்மணி, வளர்மதி, ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருங்குளம்
முதல்-அமைச்சர் வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) கருங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அமைச்சர் கடம்பூர்ராஜூ மற்றும் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் திருமணமண்டபத்தைபார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலுக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பது கொடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன், கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், துணை சேர்மன் லட்சுமணபெருமாள், கருங்குளம் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்கான், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி செயலாளரும் கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான உதயசங்கர், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஓ.பி.முஸ்தபா, கருங்குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கால்வாய் முருகையா பாண்டியன், ஸ்ரீவைகுண்டம்நகர செயலாளர் காசிராஜன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கருப்பசாமி, கருங்குளம்ஒன்றிய பொருளாளர்செந்தாமரை, ஒன்றியஅவைத்தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் விஜய உடையார், மாவட்ட பிரதிநிதி திருவரங்கம் முன்னாள் ஊராட்சி செயலாளர் கள்ளாண்டன், கிளைச் செயலாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்செந்தூர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை)திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, வீரபாண்டியன்பட்டினம் கார்மேல் மஹாலில் மீனவ மக்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய வளாகத்தில் பனை தொழிலாளர்களுடன் சந்தித்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, அவருடன் மாவட்ட கலெக்டர் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு், தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன் (திருச்செந்தூர்) , விஜயகுமார் (ஆழ்வை கிழக்கு) ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்கள் பூந்தோட்ட மனோகரன், கண்ணன், நகர செயலாளர்கள் செந்தமிழ் சேகர், மகேந்திரன், புனித சூசை அறநிலைய உதவி இயக்குநர் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story