தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jan 2021 10:08 AM IST (Updated: 1 Jan 2021 10:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையை அடுத்த ராமநாதபுரம் அருகே உள்ள சப்தகிரி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 66). இவர் தனது மகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இதன் காரணமாக கலியமூர்த்தியின் வீட்டுக்கு அவருடைய தம்பி திருவையாறு அருகே உள்ள சிறுபுலியூர் புதுமனை தெருவை சேர்ந்த அன்பரசன் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று கலியமூர்த்தியின் வீட்டு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை எதிர் வீட்ைட சேர்ந்தவர் கவனித்துள்ளார்.

இதுகுறித்து அன்பரசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 1½ பவுன் நகை, 650 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பட்டு புடவைகளை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பட்டுப்புடவைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story