விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை அதிகபட்சமாக திண்டிவனத்தில் 69 மி.மீ. பதிவானது
விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திண்டிவனத்தில் 69 மி.மீ. பதிவானது.
விழுப்புரம்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் தீவிரம் காட்டாத மழை, கடந்த நவம்பர் மாதம் இறுதியில் தீவிரமடைந்தது. இதனிடையே வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான நிவர், புரெவி புயல்களின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு கிராமங்களில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2 வாரங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் பொதுமக்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்.
பலத்த மழை
இந்நிலையில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு 11 மணிக்கு சாரல் மழை பெய்தது. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. அதன்பிறகு நள்ளிரவு 12 மணியில் இருந்து கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. அதன் பின்னர் சிறிது நேரம் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் சாரல் மழையாக நேற்று காலை 8 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. இதேபோல் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் மிதமான மழையும், கடலோர கிராமங்களான மரக்காணம், கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம், கூனிமேடு, நொச்சிக்குப்பம், ஆரோவில், வானூர், நடுக்குப்பம், அனிச்சங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் விடிய, விடிய கனமழையும் கொட்டி தீர்த்தது.
தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது
இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர், பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக விழுப்புரம் நகரில் புதுச்சேரி சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் சாலை, பாகர்ஷா வீதி உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையினால் ஏற்கனவே நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பிய நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அந்த நீர்நிலைகள் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திண்டிவனம்.............................69
வல்லம்........................................68
மரக்காணம்..............................60
செஞ்சி.........................................60
செம்மேடு..................................55
கெடார்.......................................51
நேமூர்..........................................45
கோலியனூர்............................43
சூரப்பட்டு................................43
கஞ்சனூர்...................................40
முகையூர்....................................39
வளவனூர்.................................37
விழுப்புரம்.................................36
அனந்தபுரம்..............................35
முண்டியம்பாக்கம்.................31
அவலூர்பேட்டை.................26
வளத்தி.........................................23
மணம்பூண்டி...........................20
அரசூர்.......................................20
திருவெண்ணெய்நல்லூர்....18
வானூர்.......................................16

Related Tags :
Next Story