உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி காப்பாற்ற முயன்ற அண்ணியும் உயிரிழந்த பரிதாபம்
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலியானார். காப்பாற்ற முயன்ற அவரது அண்ணியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் ஊராட்சிக்குட்பட்ட சிவலியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 23). பி.காம். பட்டதாரியான இவருக்கு தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்ணுடன் ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் விக்னேஷ் நேற்று காலை 11.30 மணியளவில் அவரது மாமனார் வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு ஓய்வெடுக்க சென்றார். அப்போது கொட்டகைநுழைவு பகுதியின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு கேட்டை தொட்டபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் தாக்கியது
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் சவுந்தர பாண்டியனின் மனைவி ரோஜா(25) ஓடோடி சென்று விக்னேஷை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு போராடினர். இவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடுவதை பார்த்து விக்னேசின் தாய் ராஜகுமாரி(55) அவர்களை காப்பாற்றுவதற்காக இருவரையும் பிடித்து இழுக்க முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.
2 பேர் பலி
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மரக்கடையால் 3 பேரையும் அடித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விக்னேஷ், ரோஜா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
ராஜகுமாரிக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மின்சார வயர்
இதுபற்றி தகவலறிந்து வந்த திருநாவலூர் போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் கொட்டகையில் சென்ற மின்சார வயர் அறுந்து இரும்பு கேட்டை தொட்டபடி கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் விக்னேஷ் இரும்பு கேட்டை தொட்டபோது அவரை மின்சாரம் தாக்கியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவலர் தேர்வு எழுதியவர்
புதுமாப்பிள்ளையான விக்னேஷ் போலீஸ் பணியில் சேர மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்தார். கடந்த 13-ந் தேதி நடைபெற்ற 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் கலந்து கொண்டு அவர் சிறப்பாக தேர்வு எழுதியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் மின்சாரம் தாக்கி பலியானதால் போலீஸ் சீருடையில் வலம் வரவேண்டும் என்கிற விக்னேஷின் நனவு கனவாகவே போய்விட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளையும், அவரது அண்ணியும் பலியான சம்பவம் சிவலியாங்குளம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story