புதுக்கோட்டை மாவட்டத்தில் ேமலும் 78 அம்மா மினி கிளினிக்குகள் விைரவில் தொடங்கப்படும்; கலெக்டா் தகவல்
குக்கிராமங்களில் வசிக்கும் ஏழை-எளிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இத்திட்டம் ஆங்காங்கே தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
சாதாரண காய்ச்சல், தொற்றா நோய் போன்ற நோய்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மினி கிளினிக் செயல்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 79 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வீரப்பட்டியில் அம்மா மினி கிளினிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், மீதமுள்ள 78 இடங்களில் மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story