வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் மங்கலத்தில் மெழுகுவர்த்தி ஏந்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பல்லடம் தொகுதி தலைவர் ஹக்கீம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹபிபுர் ரகுமான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் ரபீக், திருப்பூர் ஒன்றிய தலைவர் சபிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் முஜிபுர்ரகுமான் கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த யாசர் அரபாத், ஜாபர் சாதிக், அபுதாஹிர், நவுசாத் அலி பாரூக், ஷேக் பரீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் பல்லடம்-மங்கலம் ரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் விவசாயிகளை, விவசாய நிலங்களை அழிக்கும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், என்று கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகி நாகூர்மீரான் தலைமையில், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story