ஜெயலலிதாவின் கனவு நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பேச்சு
ஜெயலலிதாவின் கனவு நிறைவேற சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை வழங்கி பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர அவைத்தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுக்கு சேவையாற்றும் இயக்கம்
அ.தி.மு.க.வை பொறுத்தவரை உழைப்புக்கும், விசுவாசத்துக்கும் உரிய அங்கீகாரம் வழங்கி பதவி கொடுத்து அழகு பார்க்கிற இயக்கம், மக்களுக்கு சேவையாற்றுகிற இயக்கம் அ.தி.மு.க. நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என்று தைரியமாக சொல்கிறோம். அதுபோல் கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினால் சொல்ல முடியுமா? எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் இந்த நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது. அ.தி.மு.க.வினர், எம்.ஜி.ஆரின் பெயரை சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் நாங்கள் அவரது பிள்ளைகள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் இருக்குமா? இருக்காதா? என்று எண்ணினார்கள். அவ்வாறு எண்ணியவர்களுக்கு மத்தியில் இந்த 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். அவரது தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்து நாம் 50-ம் ஆண்டு பொன் விழாவை கொண்டாட வேண்டும்.
கடுமையாக உழைக்க வேண்டும்
ஜெயலலிதாவின் கனவு, லட்சியம் நிறைவேற வேண்டுமானால் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது. ஒவ்வொருவரும் தங்களை வேட்பாளராக நினைத்துக்கொண்டு அயராது தேர்தல் களப்பணியாற்ற வேண்டும்.
தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் நாடு அமைதியாக இருக்கிறது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. தி.மு.க.வினருக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது. அவர்கள் ஆட்சியில் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அந்த திட்டத்தின் மூலம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்தான் பயனடைவார்கள். இதையெல்லாம் மக்களிடம் நாம் எடுத்துக்கூற வேண்டும். இந்த தேர்தலோடு தி.மு.க.விற்கு முடிவுறை எழுதப்படும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது கூடி வந்திருக்கிறது.இதை நாம் நல்ல முறையில் பயன்படுத்தி தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் ஒற்றுமையோடு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் மந்தக்கரை ஜானகிராமன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் ராதிகா செந்தில், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ்செல்வி அற்புதவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் திருப்பதி பாலாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் செங்குட்டுவன், அசோக்குமார், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் கோல்டுசேகர், நகர மாணவர் அணி தலைவர் கணேஷ்சக்திவேல், செயலாளர் அன்பரசன், இலக்கிய அணி செயலாளர் கலை, முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் மீன்பாபு, பாலசுப்பிரமணியம், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி, நிர்வாகி நூர்ஜியாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story