சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுக்கு ரஜினி ஆதரவு தருவார் திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுக்கு ரஜினி ஆதரவு தருவார் என நம்புவதாக திருச்சியில் ஜி.கே.வாசன் கூறினார்.
திருச்சி,
நடைபெற இருக்கிற சட்டமன்ற கூட்டத்தில் த.மா.கா.வின் பிரதிநிதிகள் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணி குறித்து ஆலோசித்து வருகிறேன். த.மா.கா தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிட்டுவருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் சின்னம் பிரச்சினை எப்போதும் இருந்ததில்லை. வரும் தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம். எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவோம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனையை முடித்தபிறகு, களநிலவரங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
ரஜினி கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் கட்சி தொடங்க முடியவில்லை. வரும் தேர்தலில் நல்லவர்களுக்கு ரஜினி ஆதரவு தருவார் என நம்புகிறேன். முதல்-அமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில், மாநிலத்தில் எங்கள் கூட்டணியின் முதன்மை கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுக்கு பிறகு தான் மற்ற கட்சிகள் வரிசையில் வர முடியும். இதேபோல் மத்தியில் பா.ஜ.க.வுக்கு பிறகு தான் மற்ற கட்சிகள் வரிசையில் வர முடியும். முதன்மை கட்சியான அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அறிவித்துள்ளது. கூட்டணியின் முதன்மை கட்சி எந்த வேட்பாளரை முதல்-அமைச்சராக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளதோ, அதை ஏற்று நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
அழகிரியின் நிலைப்பாடு
தேர்தல் நெருங்கும்போது எங்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டம் முறைப்படி படிப்படியாக நடைபெறும். மு.க.அழகிரி தி.மு.க.வின் தென்மண்டல பொறுப்பாளராக உயரிய பதவியில் இருந்துள்ளார். தென்மாவட்டம் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் இந்த தேர்தலில் அழகிரியின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அ.தி.மு.க.வில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறி இருக்கிறார். அதே கருத்தை தான் நானும் கூறுகிறேன்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை பொறுத்தவரை, விவசாயிகள் விழித்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்களுடைய பிரச்சினை குறித்து அரசுடன் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். புள்ளம்பாடியை தனி தாலுகாவாக மாற்ற முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க எங்கள் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்மாநில காங்கிரஸ் திருச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல், குணா, ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story