கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிய 29 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்; வியாபாரிக்கு போலீசார் வலைவீச்சு


வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் சோதனைசெய்தபோது எடுத்தப்படம்.
x
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் சோதனைசெய்தபோது எடுத்தப்படம்.
தினத்தந்தி 5 Jan 2021 8:29 AM IST (Updated: 5 Jan 2021 8:29 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 29 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான வியாபாரியை போலீசார் தேடிவருகின்றனர்.

போலீசார் சோதனை
கோவில்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெருவில்உள்ளவீட்டில் ரேஷன்அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் மணிகண்டன், வட்ட வழங்கல் அதிகாரி சுப்புலட்சுமி, இலுப்பையூரணி கிராம நிர்வாக அலுவலர் திருவேங்கடராஜ், கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் வள்ளுவர் நகர் முதல் தெருவுக்கு சென்று சோதனையிட்டனர்.

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
இதில் வியாபாரியான நாகராஜன் (வயது 35) வீட்டில் தலா 50 கிலோ எடைகொண்ட 29 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். நாகராஜன் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நாகராஜனை தேடிவருகின்றனர்.

Next Story