கிராம உதவியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்


கிராம உதவியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 5 Jan 2021 8:44 AM IST (Updated: 5 Jan 2021 8:44 AM IST)
t-max-icont-min-icon

கிராம உதவியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்னிலம்,

நன்னிலத்தில் ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் முருகையன், ரங்கசாமி, மாநில செயலாளர் பிச்சை, திருவாரூர் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தஞ்சை மாவட்ட தலைவர் தன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரம்

ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்களுக்கு 1995-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் இருந்த காலத்திற்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும். ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்களுக்கு குடும்ப நல நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story