ஈரோடு மாவட்டத்தில் உருமாறிய கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை; கலெக்டர் சி.கதிரவன் தகவல்
பவானி பகுதியில் வருகிற 6-ந் தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக பவானியை அடுத்த பண்டார அப்பிச்சி கோவில் அருகே பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
பொதுக்கூட்ட மேடை மற்றும் அங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பண்டார அப்பிச்சி கோவில் பகுதிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வந்தார். பின்னர் அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உருமாறிய கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பா நாட்டில் இருந்து கணவன், மனைவி 2 பேர் விமானம் மூலம் கோவை வந்து பின்னர் ஈரோட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கணவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து அத்தாணி பகுதிக்கு வந்தார். அவருக்கும் நோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேரும் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி. மருத்துவ கல்லூரி மருத்துவ மனைவியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story