கயத்தாறு அருகே பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியதால் விவசாயிகள் வேதனை
கயத்தாறு அருகே பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராமத்தில் சுமார் 1,200 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களில் விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து விதைத்து உள்ளனர். பயிர்களை செடி, பூ, காய் பருவத்தில் இருந்து இதுவரை நான்கு விதமான மருந்துகளையும் தெளித்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஒவ்வொருவரும் 5 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை பாசிப்பயறு, உளுந்து பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்கள் செடியாகி பூத்து காய்த்து குலுங்கும் நேரத்தில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இதனால் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நிவாரணம்
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயத்தை நம்பியே எங்கள் குடும்பங்கள் உள்ளன. தற்போது பயிர்களில் மஞ்சள் ேதமல் நோய் தாக்கத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே இந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வட்டில்லா கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story