டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2021 5:57 AM IST (Updated: 7 Jan 2021 5:57 AM IST)
t-max-icont-min-icon

உண்ணாவிரத போராட்டத்திற்கு பெரம்பலூர் போலீசார் அனுமதி மறுத்ததால், அவர்கள் நேற்று பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 9-வது வார்டு பொதுமக்கள் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஜனவரி 7-ந்தேதி (நேற்று) துறைமங்கலத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தனர். ஆனால் உண்ணாவிரத போராட்டத்திற்கு பெரம்பலூர் போலீசார் அனுமதி மறுத்ததால், அவர்கள் நேற்று பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு துறைமங்கலம் 9-வது வார்டு ஊர் தலைவர் தங்க.சண்முகசுந்தரம், புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் பிச்சை பிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் துறைமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள், சிறுவர்-சிறுமிகள், மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story