நெல்லையில் யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கலெக்டரிடம் வழங்கிய முதியவர்


யாசகம் மூலம் கிடைத்த பணத்தை கலெக்டரிடம் வழங்கிய பூல்பாண்டி.
x
யாசகம் மூலம் கிடைத்த பணத்தை கலெக்டரிடம் வழங்கிய பூல்பாண்டி.

நெல்லையில் யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கலெக்டரிடம் முதியவர் வழங்கினார்.

யாசகம் பெற்று சேவை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 70). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று சேர்த்த பணத்தை அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். இவர் தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 400 பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி உள்ளார்.

சமீபத்தில் அவர் மதுரையில் யாசகம் மூலம் சேர்த்த பணத்தை, கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ டிரைவர்கள், ெதாழிலாளர்களுக்கு வழங்கினார். மேலும் மதுரை கலெக்டரிடமும் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வழங்கினார்.

ரூ.10 ஆயிரம் நிதி உதவி
இந்த நிலையில் பூல்பாண்டி நெல்லை பகுதியில் யாசகம் மூலம் சேர்த்த ரூ.10 ஆயிரத்தை நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் வழங்கி, அதனை கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களுக்கு வழங்குமாறு கூறினார்.

இதுகுறித்து பூல்பாண்டி கூறுகையில், ‘நான் ஒவ்வொரு பகுதியிலும் யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு வழங்கி வருகிறேன். தற்போது கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களுக்கும் உதவி வருகிறேன். நான் யாசகம் பெறுவதை குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும், தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறேன்’ என்றார்.

Next Story