காஞ்சீபுரம் மாவட்டத்தில் 588 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 588 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x
தினத்தந்தி 8 Jan 2021 12:08 AM GMT (Updated: 8 Jan 2021 12:08 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 352 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி படப்பை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலைச்செல்வி, திவ்யபிரபா ஆகியோர் தலைமை தாங்கினர். ஸ்ரீபெரும்புதூர் வேளாண் உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் எழிச்சூர ராமச்சந்திரன், படப்பை அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பழனி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

இதேபோல் சோமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கே.பழனி கலந்து கொண்டு மாணவ- மாணவிகள் 236 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் சோமங்கலம் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story