கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வரக் கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வரக் கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2021 8:17 AM IST (Updated: 8 Jan 2021 8:17 AM IST)
t-max-icont-min-icon

கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வரக்கோரி திருவாரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்-அரசு ஊழியர்களின் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு மற்றும் குற்றவியல் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். தாய்மொழி கல்வி பயின்றோருக்கு தமிழக அரசு பணியில் 80 சதவீதம் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ரத்து செய்ய வேண்டும்

ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மதி முன்னிலை வகித்தார். இதில் மாநில கொள்கை விளக்க செயலாளர் மோகன், மாநில விதிமுறை குழு உறுப்பினர் செந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் ரவிகாசன், தீனதயாலன், முருகானந்தம், அருளரசன், பழனிசெல்வி, மல்லிகா, கவிதா, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நிர்வாகி பாலமாணிக்கம் நன்றி கூறினார்.

Next Story