பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்கக்கோரி நாகையில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் நாகை அவுரித் திடலில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் புகழேந்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சோழன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹமித் பாஷா, மாவட்ட துணைச் செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் மோகன் பேசினார்.
கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை கைவிட்டுவிட்டு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ. 15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.
பொங்கல் போனஸ்
கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் பதவி உயர்வை 10 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்தியும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியும் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. முடிவில் மாநில பொதுச் செயலாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story