தஞ்சையில் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


தஞ்சையில் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2021 9:30 AM IST (Updated: 8 Jan 2021 9:30 AM IST)
t-max-icont-min-icon

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சையில் உள்ள விரைவு போக்குவரத்துக்கழக அலுவலக வளாகத்திலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் செங்குட்டுவன், செயலாளர் பழனிவேல், தொ.மு.ச. செயலாளர் ராஜேந்திரன் மற்றும் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பந்தம் இல்லாத சங்கங்களை அழைக்கக்கூடாது என கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story