பளுகல் பகுதியில் நகை பறிக்கும் கும்பலில் பெண் சிக்கினார்
பளுகல் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பலில் பெண் சிக்கினார்.
பத்மநாபபுரம்,
பளுகல் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனியாக இருந்த பெண்களை குறி வைத்து ஒரு கும்பல் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது.
இதுதொடர்பாக கேரள மாநிலம் நல்லமாமூட்டை சேர்ந்த அனில்குமார் (வயது 59), முகமது ஷாபியை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் சேர்ந்து மேலும் சிலர் தொடர்ந்து கைவரிசை காட்டிய தகவல் வெளியானது.
பெண் சிக்கினார்
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த நகை பறிப்பு வழக்கில் பளுகல் பகுதியை சேர்ந்த அனிதா (55) என்பவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
அதாவது நகையை பறிக்கும் கும்பல், நகையை விற்று தருவதற்காக அனிதாவை நாடி உள்ளனர். அவர் மூலம் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நகைகளை விற்று பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் அனிதா அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அனில்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story