வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி விழுப்புரம், திண்டிவனத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி விழுப்புரம், திண்டிவனத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அனைத்து சமுதாய மக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரியும் சென்னையில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பிறகும் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பும், பேரூராட்சி அலுவலகங்கள் முன்பும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இதன் தொடர்ச்சியாக நேற்று நகராட்சி அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
அந்த வகையில் விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் விழுப்புரம் பூந்தோட்டம் பாதையில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் இருந்தும், காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் இருந்தும் ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு திரண்டனர். தொடர்ந்து, அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. தன்ராஜ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில துணைத்தலைவர் அரிகரன், மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாவட்ட செயலாளர் பாலசக்தி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், அன்பு, சுரேஷ், துரைசுப்பிரமணி, செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொகுதி செயலாளர்கள் சிவக்குமார், சீனிவாசன், சரவணக்குமார், இளைஞர் சங்க மாநில துணைத்தலைவர் மணிமாறன், துணை செயலாளர் தவஞானம், நகர நிர்வாகிகள் பெருமாள், போஜராஜா, ஒன்றிய செயலாளர்கள் ஸ்டாலின், எழிலரசன், சந்தோஷ் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திண்டிவனம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி திண்டிவனத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திண்டிவனம் நேரு வீதி காமராஜர் சிலையில் இருந்து மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையில் பா.ம.க.வினர் ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நகராட்சி ஆணையர் வசந்தியிடம் மனு கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தொழிலதிபர் சுப்பராயலு, நெடி சுப்பரமணி, மலர் சேகர், மாநில துணை தலைவர்கள் ஏழுமலை, கருணாநிதி, மாநில துணை பொதுச்செயலாளர் சிவகுமார், மாவட்ட செயலாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் நகர செயலாளர் பால்பாண்டியன் ரமேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பாலாஜி, மாநில துணைத்தலைவர் சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சேது, பிரபு, பெருமாள், முன்னாள் நகர செயலாளர் வடபழனி, முன்னாள் மாவட்ட தலைவர் இளங்கோ படையாட்சி, மாநில தொழிலாளர் சங்க தலைவர் பாதிரி கோவிந்தசாமி, நகர வன்னியர் சங்க தலைவர் பூதேரி ரவி, நகர பாமக தலைவர் குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயராஜ், சவுந்தர், சரவணன், சாரம் ஜானகிராமன், ஒலக்கூர் சுப்பிரமணி, பரசுராமன் ராஜி, மகளிரணி குமாரி, பொன் மகேஸ்வரி, முனியம்மாள், செஞ்சி மாவட்ட செயலாளர் கனல் பெருமாள், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் ராஜேந்திரன், மரக்காணம் நகர செயலாளர் ரமேஷ் ,மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், செங்கேணி, மாவட்ட தலைவர் சவுந்தர்ராஜ், முன்னாள் மாவட் செயலாளர் மணிமாறன், மாவட்ட துணை செயவாளர் ஜெயகுமார், அய்யனார், ஜீவா, ஒன்றிய செயலாளர் சண்முகம், ராஜி, ராமதாஸ், கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story