வேப்பூர் பஸ் நிலையம் கட்டும் பணி நிறுத்தம் ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர் உத்தரவு


வேப்பூர் பஸ் நிலையம் கட்டும் பணி நிறுத்தம் ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 8 Jan 2021 11:25 AM IST (Updated: 8 Jan 2021 11:25 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் பயன்பெறும் வகையில் வேப்பூர் பஸ் நிலையம் கட்டப்படவில்லை என கூறி கட்டுமான பணியை நிறுத்த கூடுதல் கலெக்டர் ராஜகோபால்சுங்கரா உத்தரவிட்டார்.

வேப்பூர்,

வேப்பூரில் பழைய பஸ் நிலையத்தையொட்டி ரூ.2.60 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி, கழிவறை கட்டிடம் உள்ள பகுதியை மாற்றியமைக்க அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பஸ் நிலைய வளாக உள்பகுதி வரை பஸ்கள் வந்து செல்லும் வகையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளபடவில்லை.

இதனால் பயணிகள், வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்தார்.

வரைபடம் மாற்றி தயாரிப்பு

தொடர்ந்து, பயணிகள் மற்றும் வணிகர்கள் பயன்பெறும் வகையில் பஸ் நிலையம் கட்டுவதற்கான வரைபடத்தை மாற்றி தயாரித்து காட்ட வேண்டும். அது வரையில் கட்டுமான பணிகளை நிறுத்தவேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளுக்கு கூடுதல் கலெக்டர் ராஜகோபால்சுங்கரா உத்தரவிட்டார். அதன்படி பஸ் நிலைய கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த ஆய்வின்போது நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், விஜயா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், திலகவதி, ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story