மைசூருவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - 17-ந் தேதி போடப்படும் என கலெக்டர் தகவல்


மைசூருவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - 17-ந் தேதி போடப்படும் என கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2021 10:15 PM GMT (Updated: 8 Jan 2021 5:54 PM GMT)

மைசூருவில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 17-ந்தேதி முதல்கட்ட போலியோ சொட்டு மருந்து போடப்படும் என கலெக்டர் ரோகிணி சிந்தூரி தெரிவித்துள்ளார்.

மைசூரு, 

ைமசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மைசூரு மாவட்டத்தில் 2 கட்டங்களாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. முதல் கட்டமாக வருகிற 17-ந்தேதி போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. அதன்பின்னர் ஒரு மாதம் கழித்து 2-ம் கட்ட சொட்டு மருந்து போடப்படும். இதற்காக மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. ஆதலால் தங்களது வீடுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.

போலியோ சொட்டு மருந்து போடும் பணியை மாவட்ட ஆஷா-அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மேற்கொள்வார்கள். மேலும் அவர்களில் யாருக்காவது காய்ச்சல், இருமல், தும்மல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் போலியோ சொட்ட மருந்து போடும் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மைசூரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியின் ஒத்திகைக்கான முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மைசூருவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆதலால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இருப்பினும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கொரோனா விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story