நாக்பூரில் சம்பவம்: வினோத செக்ஸ் ஆசைக்கு பலியான வாலிபர் - கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை + "||" + Incident in Nagpur: A teenager who fell victim to bizarre sex drive
நாக்பூரில் சம்பவம்: வினோத செக்ஸ் ஆசைக்கு பலியான வாலிபர் - கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை
நாக்பூரில் வினோத செக்ஸ் ஆசைக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். இது குறித்து கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
நாக்பூர் காபர்கேடா பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு நேற்று முன்தினம் இரவு 30 வயது வாலிபர் ஒருவர் பெண்ணுடன் வந்தார். 2 பேரும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
இந்தநிலையில் நள்ளிரவில் கழுத்தை கயிறு இறுக்கியதில் வாலிபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாலிபருடன் இருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண் கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பெண்ணும், வாலிபரும் கள்ளக்காதலர்கள் எனவும், வினோத செக்ஸ் ஆசையில் வாலிபர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
வாலிபருடன் விடுதிக்கு வந்த பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. அவருக்கும் உயிரிழந்த வாலிபருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்பு இருந்து உள்ளது. அவர்கள் அடிக்கடி தங்கும் விடுதிக்கு வந்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். சம்பவத்தன்று இரவு உல்லாசமாக இருந்த போது அந்த பெண் கள்ளக்காதலனை நாற்காலியில் வைத்து கை, கால்களை நைலான் கயிற்றால் கட்டி உள்ளார். வாலிபரின் கழுத்து பகுதியையும் மற்றொரு கயிறால் கட்டி உள்ளார். பாலியல் உணர்வை தூண்டுவதற்காக இந்த வினோத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெண் கழிவறைக்கு சென்று உள்ளார்.
இந்த நேரத்தில் வாலிபர் நாற்காலியில் இருந்து தவறி விழுந்ததால் கயிறு அவரது கழுத்தை இறுக்கியதாக தெரிகிறது.
இந்தநிலையில் கழிவறையில் இருந்து வெளியே வந்த பெண் தனது கள்ளக்காதலன் பேச்சு மூச்சு இன்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர் அவர் ஓட்டல் ஊழியரை உதவிக்கு அழைத்து வாலிபரை கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து இருக்கிறார். ஆனால் ஏற்கனவே கள்ளக்காதலன் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலர்கள் இருவரது செல்போனையும் கைப்பற்றி உள்ளனர். மேலும் விடுதி மேலாளர், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலில் ஏற்பட்ட வினோத செக்ஸ் ஆசையால் ஏற்பட்ட விபரீதத்தால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாட்டுக்காரன்புதூர் அருகே மண் சரிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக வாலிபரின் அக்காள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நெல்லையில் பெய்த பலத்த மழையால் மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார். அணையில் மூழ்கிய சிறுவன் கதி என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.