திருவள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா நோய் தடுப்பூசி ஒத்திகை முகாம்; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு


திருவள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா நோய் தடுப்பூசி ஒத்திகை முகாம்; மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jan 2021 7:23 AM IST (Updated: 9 Jan 2021 7:23 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகம் மற்றும் திருவள்ளூரை அடுத்த கல்யாண குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல்-அமைச்சர் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த முகாமில் மாநில கண்காணிப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், ஊரக நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் ராணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story