ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. வாலாஜாவில் நடந்த ஒத்திகையை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டார்.
வாலாஜா,
கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளதால் தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை, புதுப்பாடி சுகாதார மையம், ராணிப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில்நேற்று நடந்தது.
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போதுஅரசின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் போடப்படவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்களை அமரவைத்து அவர்களுக்கான குறுந்தகவல் ஆன்லைன் மூலமாக வந்ததை உறுதி செய்துகொண்டு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ளவேண்டுமென அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான குளிர் சாதனக் கருவிகள் மற்றும் குளிர்சாதன சேமிப்பு மையங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதுமான அளவில் உள்ளது. இந்த தடுப்பூசிகளை முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதில் சுகாதாரப் பணியாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள பணியாளர்களுக்கு செலுத்தும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறுஅவர்கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட முதல் நிலை மருத்துவர் சிங்காரவேலு, சுகாதார நல அலுவலர் வீராசாமி, மோகன் குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story