கே.வி.குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - லட்சக்கணக்கான பணம் தப்பியது


கே.வி.குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - லட்சக்கணக்கான பணம் தப்பியது
x
தினத்தந்தி 9 Jan 2021 11:06 AM GMT (Updated: 9 Jan 2021 11:06 AM GMT)

கே.வி.குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சி செய்துள்ளனர். எந்திரத்தை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான பணம் தப்பியது.

கே.வி.குப்பம்,

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் ரைஸ்மில் தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் இந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர். பல மணி நேரம் முயற்சி செய்தும் எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்தது பற்றி தானியங்கி தகவல் வங்கிக்குக் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை வங்கி ஊழியர்கள் சென்று பார்த்தனர். அப்போது எந்திரத்தின் ஒருசில பகுதிகள் உடைக்கப்பட்டு இருந்தது. பணம் எதுவும் திருட்டுப்போகவில்லை. இது தொடர்பாக கோகுல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story