மராட்டியத்தில் கல்லூரிகளை திறப்பது குறித்து 20-ந் தேதி முடிவு; மந்திரி உதய் சாமந்த் தகவல்


மந்திரி உதய் சாமந்த்
x
மந்திரி உதய் சாமந்த்
தினத்தந்தி 10 Jan 2021 5:56 AM IST (Updated: 10 Jan 2021 5:56 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கல்லூரிகளை திறப்பது குறித்து வருகிற 20-ந் தேதி முடிவு எடுக்கப்படும் என மந்திரி உதய் சாமந்த் கூறியுள்ளார்.

20-ந் தேதி முடிவு
மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பிரச்சினை காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் பல இடங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் மாநிலத்தில் கல்லூரிகளை திறப்பது குறித்து வருகிற 20-ந் தேதி முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி துறை மந்திரி உதய் சாமந்த் கூறியுள்ளார். கல்லூரி முதல்வர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்பின் போது அவர் இதை தெரிவித்தார்.

50 சதவீத மாணவர்கள்
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " முதல் கட்டமாக 50 சதவீத மாணவர்களுடன் கல்லூரிகளை திறக்க எனது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்துவேன். பின்னர் கல்லூரிகளை திறப்பது குறித்து ஜனவரி 20-ந் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். கல்லூரிகளின் தற்போதைய நிலை, மாணவர்களின் நிலை, ஆசிரியர், ஊழியர்கள் பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம் " என்றார்.

Next Story