முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிப்பு: தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிப்பு: தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2021 9:01 AM IST (Updated: 10 Jan 2021 9:01 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி முன்னாள் பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுலாப்தீன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளார் அருண்சோரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story