மூங்கில்துறைப்பட்டு கால்நடை மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகை தகுதியானவர்களுக்கு ஆடுகள் வழங்க கோரிக்கை
தகுதியானவர்களுக்கு மட்டும் விலையில்லா ஆடுகள் வழங்கக்கோரி மூங்கில்துறைப்பட்டு கால்நடை மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொரசப்பட்டு காலனி, பொருவளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்குவதற்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் நன்கு வசதி உள்ளவர்களை மட்டும் தேர்வு செய்து இருப்பதாகவும், வசதி இல்லாதவர்களின் பெயர்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொருவளூர் நரிக்குறவர்கள் மற்றும் பொரசப்பட்டு, காலனி பகுதியை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மூங்கில்துறைப்பட்டு கால்நடை மருத்துவமனையை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அவர்களிடம் கால்நடை மருத்துவர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நரிக்குறவர்கள் கூறும்போது, நாங்கள் பாசி மணியை வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். அரசு வழங்கும் எந்த ஒரு திட்டமும் எங்களுக்கு வருவது இல்லை. மேலும் எங்களுக்கு சொந்தமாக வீடு, நிலம் இல்லை. எங்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா ஆடுகளை ஏன் வழங்க கூடாது என்றும கேள்வி எழுப்பினர்.
மேலும் அனைத்து வசதி உள்ளவர்களின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆனால் எந்த ஒரு வசதியும் இல்லாமல் அன்றாடம் வயிற்றுப் பிழைப்பிற்கு கஷ்டப்படும் எங்களுக்கு ஏன் ஆடுகளை வழங்க கூடாது என்று கூறினர்.
புதிய பட்டியல்
பின்னர் அவர்களிடம் கால்நடை மருத்துவ அலுவலர் கூறுகையில் தற்போது தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை நிறுத்திவைத்துவிட்டு புதிதாக பயனாளிகள் தேர்வு செய்து தகுதியானவர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தகுதியானவர்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கக்கோரி மூங்கில்துறைப்பட்டு கால்நடை மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுயைிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story