கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா போராட்டம்


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2021 11:18 AM IST (Updated: 10 Jan 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஜாகிர்உசேன், வில்லியம், அமுதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சண்முகசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் ஜோதிபாபு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாலிங்கம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சர்ச்சில் காரல்மார்க்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் கலாநிதி, சுதா, கணபதி, பொருளாளர் தண்டபாணி, வட்டார செயலாளர்கள் தங்கராசு, அன்பரசு, செந்தில்குமார், மதலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story