படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை


படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 Jan 2021 7:42 AM IST (Updated: 16 Jan 2021 7:42 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அரங்கலட்சுமி (வயது 48). இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 29). இவருக்கு 5 வயதில் பாலமுருகன் என்ற மகன் உள்ளான். தாயாருடன் வசித்து வந்த பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்ததில் குடும்பத்தகராறு காரணமாக பிரியதர்ஷினியும் அவரது கணவர் மணிகண்டனும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதும் அதன் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

பிரியதர்ஷினியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story