கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு இந்திப்பட உலகம் பாராட்டு


கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு இந்திப்பட உலகம் பாராட்டு
x
தினத்தந்தி 17 Jan 2021 2:01 AM GMT (Updated: 2021-01-17T07:31:40+05:30)

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கி உள்ளது.

மும்பை, 

இதுபற்றி இந்திப்பட உலகினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதுபற்றிய ஒரு பார்வை இது.

நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான பரேஷ் ராவல்:-

மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்கி இருக்கிறது. விஞ்ஞானிகள், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. பிரதமர் மோடிக்கும் நன்றி.

பட தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா:-

மனதில் கலவையான உணர்வுகள். இந்த ஆண்டு இன்னும் பல கண்டுபிடிப்புகளை செய்வோம். ஆனாலும் வாழ்வில் எதையும் போல எந்த உத்தரவாதமும் இல்லை. தடுப்பூசிக்கு காரணமான சுகாதார பணியாளர்கள், விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் குணால் கபூர்:-

விஞ்ஞானிகள், டாக்டர்கள், அரசாங்கம், சுகாதார பணியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அயராது உழைத்து, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மேற்கொள்வதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.

நடிகை நிம்ரத் கவுர்:-

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கு காரணமான மருத்துவ உலகினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது சுமுகமான, வெற்றிகரமான தொடக்கமாக இருக்கட்டும்.

பட இயக்குனர் அசோக் பண்டிட்:-

பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின்கீழ், நமது முன்வரிசை வீரர்கள், டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், போலீஸ் அதிகாரிகள், சாமானிய மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடினார்கள்.

நடிகர் ரன்விர் ஷோரே:-

கொரோனா வைரசே போ போ.

நடிகர் அனுபம் கெர்:-

ஜெய் ஹோ.

நடிகர், தயாரியப்பாளர் துஷார் கபூர்:-

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story