திருவாரூரில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்


திருவாரூரில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2021 2:56 AM GMT (Updated: 17 Jan 2021 2:56 AM GMT)

திருவாரூரில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருவாரூர், 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி முதல் நாள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழாவும், இரண்டாது நாள் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டு பொங்கல் விழாவும், 3-வது நாளாக நேற்று காணும் பொங்கல் விழா பண்பாடுகளை பறை சாற்றும் வகையில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பொங்கல், மாட்டு பொங்கல் பண்டிகை கலை கட்டிய நிலையில் காணும் பொங்கல் விழா கொரோனா காரணமாக கட்டுப்பாடுடன் கொண்டாடப்பட்டது. திருவாரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஒன்று கூடி கொண்டாடி மகிழும் நிலையில் நேற்று மழை பெய்ததால் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இருந்தபோதிலும் வீடுகளில் இருந்து சமைத்து கொண்டிருந்த உணவினை ஒனறாக அமர்ந்து பரிமாறி மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.

விளையாட்டு போட்டிகள்

கோவில் பிரகாரங்களில் குழந்தைகள் விளையாடி கொண்டாடினர்.

கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் இசை நாற்காலி, கபடி, கிரிக்கெட், ஓட்டபந்தயம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்டம் முழுவதும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. காணும் பொங்கல் விழாவை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சாத்தனூர்

வடுவூர் அருகே உள்ள சாத்தனூரில் காணும் பொங்கலையொட்டி காளியம்மன் கோவில் வளாகத்தில் திருவிழா நடத்தப்பட்டது. இதில் வடுவூர் மற்றும் சாத்தனூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து காளி அம்மனை வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம். செய்தனர்.

முற்றிலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட பகுதி வடுவூர் என்பதால் பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளான காணும் ெபாங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

Next Story