குற்றங்களை தடுக்க கிராமங்களில்தான் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்; ஐ.ஜி. ஜெயராம் பேச்சு
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஒரு சிறுமிக்கு, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் பரிசுகுற்றங்களை தடுக்க கிராமங்களில்தான் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் கூறினார்.
பரிசு வழங்கினார்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளாக தமிழர் திருநாள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம், சன்னாசிநல்லூர் கிராமத்திற்கு வந்தார்.
அவர் அந்த கிராமத்தை சேர்ந்த, மத்திய வணிகத்துறை அதிகாரியாக தேர்வு பெற்றுள்ள மாணிக்கவேல் வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி...
அவர் பேசுகையில், இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் தான். இந்த கிராமத்தில் இருந்து அண்ணாதுரை என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, மாணிக்கவேல் என்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி உருவாகி உள்ளனர்.
அவர்களை நேரில் சந்தித்து பாராட்ட வந்தேன். கிராமங்களில் தான் குற்றங்களை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். இங்கு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கும், சன்னாசிநல்லூர் கிராமத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.
விழாவில் அரியலூா் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை சூப்பிரண்டு மதன், தளவாய் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






