காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்


காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Jan 2021 2:07 AM GMT (Updated: 2021-01-18T07:37:31+05:30)

காரிமங்கலம் ஒன்றியத்தில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர். கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

காரிமங்கலம், 

காரிமங்கலம் ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மாட்லாம்பட்டி, சின்னமாட்லாம்பட்டியில் வடிகால் கால்வாய் மறுசீரமைக்கும் பணி, சின்னமாட்லாம்பட்டியில் பல்நோக்கு கட்டிடம் அமைக்கும் பணி ரூ.45.20 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளது. இந்த வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார்.

இதில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர்கள் ரவிசங்கர், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடன் உதவி

காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடைபந்து மைதானம், காரிமங்கலம் பகுதியில் தார்சாலை உள்பட ரூ.2.82 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

இதேேபான்று ஜிட்டாண்டஅள்ளி மற்றும் ஜக்கசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவியை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் கார்த்திகா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காவேரி, ஒன்றிய குழுத்தலைவர் சாந்தி பெரியண்ணன், துணைத்தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கத்தலைவர் சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், மீனா, முன்னாள் ஒன்றியகுழு தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story