வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, திருப்பூரில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி; அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு
மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று பல்லடத்தில் நடந்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
டிராக்டர் பேரணி
பல்லடத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 26-ந்தேதி (குடியரசு தினத்தன்று) தேசியக்கொடி கட்டி டிராக்டர் பேரணி நடத்துவது.
பல்லடம் சாலை-அருள்புரம், தாராபுரம் சாலை-கோவில்வழி, அவினாசி சாலை- காந்திநகர், ஊத்துக்குளி சாலை- பாளையக்காடு என 4 முனைகளிலிருந்து டிராக்டர் பேரணி மற்றும் இருசக்கர பேரணியாக புறப்பட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து தேசிய கொடி ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
ஆதரவு கோருவது
இந்த பேரணியில் அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடி கட்டி பங்கேற்க வேண்டும் என விவசாயிகளையும், விவசாய அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கோருவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர்கள் ரத்தினசாமி, எஸ்.எம்.பழனிசாமி, கொ.ம.தே.க. விவசாய அணி சார்பில் ஏ.பி.தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சி.பிஐ) மாவட்ட தலைவர் கே. சின்னசாமி, மாவட்ட துணைத்தலைவர் ஜி.கே.கேசவன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் ஏ.பாலதண்டபாணி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.பரமசிவம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.வெங்கட்ராமன் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.குழந்தைசாமி, பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story