சாலை விபத்து உயிரிழப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாநிலங்களில் மராட்டியம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவலை


சாலை விபத்து உயிரிழப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாநிலங்களில் மராட்டியம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவலை
x
தினத்தந்தி 19 Jan 2021 6:27 AM IST (Updated: 19 Jan 2021 6:27 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்து உயிரிழப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாநிலங்களில் மராட்டியம் இடம்பெற்று இருப்பதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்து உள்ளார்.

மும்பை, 

மும்பையில் நேற்று 32-வது சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு வாரத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய போக்குவரத்து மந்திரி அனில் பரப் பேசும்போது, மராட்டியத்தில் கடந்த ஆண்டில் (2020) 25 ஆயிரத்து 456 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 11 ஆயிரத்து 452 பேர் உயிரிழந்து உள்ளனர். சாலை விபத்து உயிரிழப்புகளில் முதலிடம் பிடித்த 3 மாநிலங்களிலும் மராட்டியமும் இடம்பெற்றுள்ளது' என்றார்.

இதையடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

சாலை விபத்து உயிரிழப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் இடம்பிடித்து இருக்கிறது என்று வெறுமனே கூறி விட முடியாது. இது கவலையளிக்கும் தீவிர பிரச்சினை. சாலை பாதுகாப்பு வாரம் என்பது ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஒரு ஆண்டு கடைப்பிடிப்பது அல்ல. தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். மரணங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் அயர்ந்து தூங்கி விடும்போது அவர்களை எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். அதுபோன்ற வாகனங்களை ஆய்வு செய்ய விரும்புகிறேன். இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.

Next Story