வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா
x
தினத்தந்தி 19 Jan 2021 2:26 AM GMT (Updated: 19 Jan 2021 2:26 AM GMT)

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளி கிராம மக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளி கிராம மக்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கிராம மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு 114 இலவச வீட்டுமனை பட்டா வழங்க 1.58 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வழங்குவதாக தற்போது தெரிவித்துள்ளனர். இதனால் எங்கள் எதிர்கால வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அடுக்குமாடி குடியிருப்புக்கு பதிலாக வீட்டு மனைகளை வழங்கி அதற்கான பட்டாவை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Next Story