இருதரப்பினர் இடையே மோதல்; பெண் உள்பட 7 பேர் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2021 1:16 AM IST (Updated: 20 Jan 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினர் இடையே மோதல் தொடா்பாக பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனா்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வானத்திரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த சுந்தரவேலின் மகன் சாமிநாதன்(வயது 27). அதே பகுதியை சேர்ந்த சங்கரின் மகன் கார்த்திக்(26). இவர்கள் இருவருக்கும் இடையே அப்பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே தண்ணீர் குழாய் அமைப்பதில் தகராறு ஏற்பட்டது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சாமிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (25), சுந்தரவேல்(25), அய்யப்பன்(34) ஆகியோரும், கார்த்திக், முருகபாண்ட (28), பிரியா(27) ஆகியோரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினர் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 7 பேரையும் கைது செய்தனர்.

Next Story