உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தென்காசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2021 5:29 AM IST (Updated: 20 Jan 2021 5:29 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட அவை தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் காத்தவராயன், நகர செயலாளர் சுடலை, பாசறை மாவட்ட செயலாளர் சீத்தாராம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் நெல்லை முகிலன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் சாந்தசீலன், வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் முருகன் ராஜ், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். மனோகரன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வாசுதேவன், வேல்முருகன், செல்வராஜ், மூர்த்திபாண்டியன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தலைமை கழக பேச்சாளர்கள் அரிகிருஷ்ணன், முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகர செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


Next Story