வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி; சண்முகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
அப்பன்கோவில் கிராம பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சண்முகநாதன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
நிவாரண உதவி
தென்திருப்பேரை அருகேயுள்ள அப்பன்கோவில் கிராமம் வ.உ.சி.நகர், வடம்போக்கி தெரு ஆகிய வெள்ளம் பாதித்த பகுதிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு ஆகிய நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன் அழகேசன, ்மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கூட தாளாளர் ரவிராஜன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் எடிசன் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் எப்ராஹிம், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாவட்ட விவசாய பிரிவு துணைத் தலைவர் பால்துரை மற்றும் பழனி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாசாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பில் அ.தி.மு.க. கிளை சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு புதுக்குளம் ஊராட்சி தலைவர் பாலமேனன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி முன்னிலை வகித்தார். கிளை செயலர் பிரகாசதுரை வரவேற்றார். இதில் எஸ்பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியேற்றி எம்.ஜி.ஆர். படத்துக்கு மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கி பேசினார்.
இதில் ஒன்றிய செயலர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், சாத்தான்குளம் நகர செயலர் குமரகுருபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலர் பாஸ்கர் நன்றி கூறினார்.