அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா


அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 21 Jan 2021 1:24 AM IST (Updated: 21 Jan 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரியில் பிரசித்தி பெற்ற அழகுமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரியில் பிரசித்தி பெற்ற அழகுமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்களும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அம்மன் சப்பர வீதி உலா நடைபெற்று வந்தது. திருவிழாவின் சிகர நாளான 10-ம் திருவிழா அன்று சப்த கன்னியர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து .கோவில் வளாகத்தில் வில்லிசை, மேளம், கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் சப்பர வீதி உலா வருதல் நடைபெற்றது. சப்பரம் கோவில் வந்தடைந்த உடன் விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.

Next Story