மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2021 9:16 PM GMT (Updated: 20 Jan 2021 9:16 PM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி் சார்பு அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை தாமதமில்லாமல் முழுமையாக வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் செந்தில், ராமலிங்கம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story