பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்யக்கோரி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்யக்கோரி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 20 Jan 2021 10:28 PM GMT (Updated: 20 Jan 2021 10:28 PM GMT)

பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்யக்கோரி நாகையில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரே‌‌ஷ்கண்ணா வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். துணை செயலாளர் பிரகா‌‌ஷ் கலந்து கொண்டு பேசினார்.

திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாகம் பாரபட்சம் நடவடிக்கை எடுத்து, பணியாளர் கஜபதியை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும்.

பயோ மெட்ரிக் முறை

பயோமெட்ரிக் மூலம் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வழங்கும் போது காலதாமதமாவதால், பொது மக்களுக்கு சரியான நேரத்தில் பொருள் வழங்க முடியவில்லை. எனவே பயோமெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும். கட்டுப்பாடு அற்ற பொருட்களை விற்பனை செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கஜபதி நன்றி கூறினார்.

Next Story