234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகையில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுக்கான சிறப்பான திட்டத்தை வகுத்து அதை செயல்படுத்திக் காட்டியவர் எம்.ஜி.ஆர்., முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.
அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யும் அளவிற்கு உற்பத்தி செய்து வருகிறது. மழையால் பாதித்த பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம், பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 என உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
234 தொகுதிகள் வெற்றி
வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக அரியணையில் அமருவார்.
குடிமராமத்து பணிகளால் தமிழகத்தில் எல்லா அணைகளும் நிரம்பி உள்ளது. தொழில்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆசைமணி, மாநில மீனவர் செயலாளர் ஜெயபால், மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம், தலைமை கழக பேச்சாளர்கள் முருகுமணி, உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தங்க கதிரவன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story