ஜூன் இறுதிக்குள் மும்பையில் அழகுப்படுத்தும் பணியை முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவு
ஜூன் மாத இறுதிக்குள் மும்பையில் மேம்பாலங்கள், நடைபாதை, டிராபிக் சிக்னல்களை அழகுப்படுத்தும் பணியை முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பை மாநகராட்சி மேற்கொள்ள உள்ள சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் மும்பையில் நிறைவேற்றப்பட உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து விளக்கி கூறினார்.
மேலும் மும்பையில் 42 மேம்பாலங்கள், பல்வேறு இடங்களில் நடைபாதைகள் அழகுப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நடைபாதைகள், மேம்பாலங்கள், டிராபிக் சிக்னல்களை அழகுப்படுத்தும் பணி மற்றும் கழிவறைகள், உணவு மையங்கள், பஸ் நிறுத்தம் சீரமைப்பு பணி போன்றவற்றை வரும் ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதேபோல மழைக்காலத்தில் சாலைகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க சாக்கடை கால்வாய்களை அகல, ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தவும் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story