நெல்லை, தென்காசியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நெல்லை, தென்காசியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jan 2021 1:45 AM IST (Updated: 22 Jan 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கியதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட நடவடிக்கைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான அனைத்து நிலை பதவி உயர்வு ஆணைகளையும் உடனே வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தையும் முழுமையாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் செந்தில், சங்கர் குமார், முருகப்பெருமாள், முகைதீன் அப்துல் காதர், இணைச் செயலாளர்கள் சாமுவேல்ராஜ், சீனிவாசன், செலின், சங்கரன் மாவட்ட பொருளாளர் ராமலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் வீரபுத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்ைககளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் சுப்புராஜ் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் தொடக்க உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர்கள் ஜெயராமன், ராஜசேகரன், ராமநாதன், கணேசன், இணை செயலாளர்கள் வெங்கடேஸ்வரன், அன்பரசு, சிக்கந்தர் பாவா, ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம நிறைவுரையாற்றினார். மகளிர் குழு பொறுப்பாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

Next Story